தேனி மாவட்டத்தில் தொடரும் மழை
வைகை அணையின் உள் பகுதியில் தேங்கி நிற்கும் நீர்.
தேனி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்தே தினமும் சாரல்மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் இடையிடையே ஓரிரு நாள் மட்டும் இருக்கிறது. பெரும்பாலான நாட்களில் மழைப்பொழிவு இருக்கிறது. கனத்த மழை பெய்யாவிட்டாலும், லேசான சாரல் பெய்தாலும், பருவநிலை மிகவும் ஜோராக உள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் 4.2 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 15.6 மி.மீ., வீரபாண்டி 2.00 மி.மீ., பெரியகுளத்தில் 8.4 மி.மீ., போடியில் 0.6 மி.மீ., உத்தமபாளையத்தில் 2.4 மி.மீ., கூடலுாரில் 2.2 மி.மீ., பெரியாறு அணையில் 5.2 மி.மீ., தேக்கடியில் 4.00 மி.மீ., சண்முகாநதியில் 2.8 மி.மீ., மழை பெய்தது.
இந்த மழையால் பூமி நனைந்ததே தவிர குளிரவில்லை. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை. ஆறுகளிலும் நீர் வரத்து இல்லை. ஒரு மாதத்திற்கும் மேல் லேசான மழை தினமும் பெய்தாலும் எந்த அணைக்கும், ஆற்றுக்குள் நீர் வரத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப்பெரியாறு அணையில் நீர் மட்டம் 118 அடியாகவே உள்ளது. அணைக்கு விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணை நீர் மட்டம் 52.92 அடியாக உள்ளது. வைகை அணைக்கு விநாடிக்கு 114 கனஅடி தண்ணீ்ர் வரத்து இல்லை. ஆண்டிபட்டி சேடபட்டி குடிநீர் திட்டம், மதுரை குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 72 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மஞ்சளாறு அணையில் 41.65 அடி நீர் இருப்பு உள்ளது. சோத்துப்பாறையில் 46.77 அடி உயரத்திற்கு நீர் உள்ளது. சண்முகாநதியில் 28 அடி நீர் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu