மயக்கம் கலந்த மதமதப்பு தரும் போதை ஊசி கும்பலில் மேலும் ஆறு பேர் கைது
பைல் படம்.
தேனி மாவட்டம், சின்னமனுாரில் பஸ்சில் போதை ஊசி கடத்தி வந்த இருவர் கைதாகினர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருச்சி வியாபாரி ஜோனத்தன்மார்க் என்பவர் உட்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில் நேற்று அண்ணாநகர் வேளாங்கண்ணி தெருவை சேர்ந்த குணநாதன், 36, தேனி மாவட்டம் ஓடைப்பட்டியை சேர்ந்த பரந்தாமன், 20, அரண்மனைப்புதுாரை சேர்ந்த ஜெய்அட்சயகவுடா, 25, சின்னமனுாரை சேர்ந்த நவீன், 21, ஜாகீர் உசேன், 21, பெரியகுளம் இருதய குமார், 21 ஆகிய ஆறு பேர் சிக்கினர்.
இவர்கள் மருந்து நிறுவனங்களில் 10 மி.லி., அளவுள்ள குப்பிகளை வாங்கி (10 பேருக்கு பயன்படுத்தலாம்), இரண்டு மடங்கு, மூன்று மடங்கு விலை வைத்து விற்றுள்ளனர். இந்த ஊசிகள் அனைத்தும் ஆபரேசன் தியேட்டர்களில் பயன்படுத்தக்கூடியவை. மயக்கமும், மதமதப்பும் தரக்கூடிய இந்த ஊசிகளை மயக்க மருந்து நிபுணர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில ஊசிகளை எந்தெந்த நோயாளிகளுக்கு, எந்தெந்த சூழலில் பயன்படுத்தினோம் என்ற விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை மருத்துவமனைகளே பராமரிக்க வேண்டும். இந்த ஊசிகளை வாங்கிய விவரம், பயன்படுத்திய விவரங்களை முழுமையாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
வெளிமார்க்கெட்டில் வாங்கவே முடியாத இந்த ஊசிகளை இந்த கும்பல், மருந்து கம்பெனிகளில் நேரடியாக வாங்கி, பல வாட்சாப் குழுக்களை உருவாக்கி, அதில் இளைஞர்களை வலைவீசி தேடி விற்பனை செய்துள்ளனர். தமிழகம், கேரளா முழுவதம் இந்த கும்பலின் தொடர்புகள் விரிவடைந்துள்ளன. இதனால் இந்த விவகாரத்தை போலீஸ் நிர்வாகம் மிகவும் சீரியஸ் ஆக கையில் எடுத்து சிறப்பு படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் மேலும் பலர் சிக்க கூடும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu