மீண்டும் மிரட்டும் ஒற்றை யானை: விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

மீண்டும் மிரட்டும் ஒற்றை யானை: விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
X

கோப்பு படம்.

தேவாரம், கோம்பை, ரெங்கனாதபுரம் பகுதி விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் தங்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேனி மாவட்டம், தேவாரம், கோம்பை வனப்பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி வருகிறது. இதுவரை இந்த யானை தாக்கியதில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். பல நுாறு ஏக்கர் கரும்பு, தென்னை , மரவள்ளிக்கிழங்கு பயிர்களை தின்று அழித்துள்ளது. இந்த யானையினை வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டு காட்டுக்குள் அனுப்பினர்.

இந்நிலையில் மீண்டும் ஒற்றை யானை விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளது. ரெங்கனாதபுரத்தை சேர்ந்த ஆசை என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இந்த யானை மீண்டும் விளைநிலங்களில் உலா வருவதால் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே விவசாயிகள் குறிப்பாக இரவி்ல் தோட்டங்களில் தங்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. மீண்டும் இந்த ஒற்றை யானையினை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil