தற்பெருமை பேசாதவர் காமராஜர் : பிறந்த நாளில் நெகிழ்ச்சியான சம்பவம்..!

தற்பெருமை பேசாதவர் காமராஜர் :  பிறந்த நாளில் நெகிழ்ச்சியான சம்பவம்..!
X

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்ட தேனி மாவட்ட சத்திரிய நாடார் சங்க நிர்வாகிகள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்கினர்.

தமிழகத்தில் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜர் எவ்வளவோ பெரிய சாதனைகள் செய்தும் அது பற்றி பெருமை பேசியதே இல்லை.

காமராஜர் பாணியில் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் தேனி மாவட்டத்தில் நடந்தது. தமிழக மக்கள் அத்தனை பேருக்கும் தெரியும். இன்று அன்னதானமோ, கல்வி உதவித்தொகையோ, பிற உதவிகளோ செய்பவர்களில் பலர் 1000ம் ரூபாய் உதவி செய்து விட்டு, அந்த உதவியை செய்யப்போவதாக 50 ஆயிரம் ரூபாய் செலவிட்டு விளம்பரம் செய்வார்கள். குறிப்பாக சில கிளப்கள் (நாகரீகம் கருதி கிளப்புகள் பெயரை வெளியிடவில்லை) சில ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்க பல லட்சம் செலவிட்டு விழா நடத்துவார்கள். அந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் விருந்தும், மருந்தும் தடபுடலாக இருக்கும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தேனியில் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா சத்தமில்லாமல் கொண்டாடப்பட்டது. அதுவும் எப்படி நலத்திட்ட உதவிகள் பெறுபவர்களுக்கு கடைசி நிமிடம் வரை தனக்கு உதவி வந்து சேரப்போகிறது என்பது தெரியாது. இப்படி ஒருவர், இருவருக்கு அல்ல... ஒரே நாளில் பல நுாறு பேருக்கு உதவிகள் வழங்கி உள்ளனர்.

தேனி மாவட்ட சத்திரிய நாடார் சங்கம் சார்பாக ஒரே நாளில் இப்படி பல லட்சம் ரூபாய் நலத்திட்டத்தை சத்தமில்லாமல் வழங்கி உள்ளனர். ஏன் இது பற்றி விளம்பரம் செய்யவில்லை. செய்தியும் தரவில்லை என இச்சங்க தலைவர் கே.கே.ஜெயராம் நாடாரிடம் கேட்டோம். ‘‘அண்ணே.. பிளக்ஸ் வைக்கிற செலவு... நோட்டீஸ் அடிக்கிற செலவு, விளம்பரம் செய்யுற செலவு பணத்தை மிச்சம் பிடிச்சா, அந்த பணத்தில் சில மாணவ, மாணவிகளுக்கு கூடுதலாக கல்வி உபகரணங்கள் வாங்கி கொடுத்திரலாம்மே... சிலர் உதவி செய்யும் விளம்பரத்திற்கு இவ்வளவு செலவு செய்யுறது மனசுக்கு கஷ்டமாக இருக்குனே... நான் அந்த தப்ப ஒரு போதும் செய்ய மாட்டேண்னே’’ என்றார். (நாம் செய்தி வெளியிட வேண்டும் என வம்பு செய்து கேட்ட காரணத்திற்காக போட்டோக்களை எங்களுக்கு கொடுத்தனர். இது மட்டும் விளம்பரம் இல்லையா என இதனையும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.)

தேனி மாவட்ட சத்திரிய நாடார் சங்க தலைவர் கே.கே.ஜெயராம்நாடார், மாவட்ட செயலாளர் ஜி.வி.அருள்பிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ஆர்.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முருகன், பி.தமிழரசன், மாவட்ட பொருளாளர் டி.சுரேஷ் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் இந்த விழாவினை சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.

முன்னதாக போடி, தேவாரம், கோம்பை, காமாட்சிபுரம், சுக்கான்கல்பட்டி, பூதிப்புரம் உட்பட பல ஊர்களில் உள்ள உதவி தேவைப்படும் ஏழை குழந்தைகளின் பட்டியலை தயாரித்தனர். நிர்வாகிகள் அந்த ஊருக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அந்த குழந்தைகளுக்கு தகவல் கொடுத்து அழைத்து, சங்க நிர்வாகிகள் புத்தகப்பை, நோட்டுகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், பேனா, பென்சில் உட்பட பல கல்வி உதவி உபகரணங்களை வழங்கினர். தேனி மாவட்ட சத்திரிய நாடார் சங்கத்தின் செயலை கேள்விப்பட்ட பலரும், வியந்து பாராட்டி வருகிறோம். சத்தமின்றி காமராஜர் பாணியில் கல்வி நலத்திட்ட உதவிகள் செய்ததற்காக நாமும் இவர்களை வாழ்த்துவோம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!