அயோத்தி குழந்தை ராமர் கோயில் பிரமாண்டம் பற்றி தெரியுமா?
அயோத்தி ராமர் கோவிலின் தோற்றம்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற கந்தாரியா மகாதேவ் கோயில், ஒடிசாவின் கோனார்க் கோயில் ஆகியவற்றை பின்பற்றி அயோத்தி ராமர் கோயிலும் வட மாநிலங்களுக்கே உரித்தான நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில் ரூ.2000 கோடிக்கு அதிகமாக நிதி திரட்டப்பட்டு கட்டப்பட்டு வரும் கோயில் இறுதிக்கட்டத்தை எட்டி கும்பாஷேகம் முடிந்துள்ளது. ராமர் கோயிலின் வடிவமைப்பு குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த பாரம்பரியமிக்க சோம்புரா குடும்பத்தின் கலை முயற்சியில் உருவாகியுள்ளது. உலகளவில் 100க்கும் மேற்பட்ட கோயில்களை சோம்புரா குடும்பம் வடிவமைத்துள்ளது.
இந்து வேதங்களில் கூறப்பட்டுள்ள வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஷில்பா சாஸ்திரங்களின் அடிப்படையில், 235 அடி அகலம், 360 அடி நீளம், 161 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக கோயில் உருவாகியுள்ளது. கம்போடியாவின் அங்கோர் வாட், அமெரிக்காவின் சுவாமிநாராயண் அக்சர்தாம் கோயில்களுக்கு அடுத்தப்படியாக உலக அளவில் மிகப்பெரிய கோயிலாக இது மாறும். 2.7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள கோயிலில் 366 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவனின் பல்வேறு அவதாரங்களைக் குறிக்கும் 18 சிலைகள், 10 தசாவதாரங்கள், 64 சௌசத் யோகினிகள், சரஸ்வதி தேவியின் 12 வடிவங்களை உள்ளடக்கியுள்ளது
57,400 சதுரஅடியில் மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோயிலின் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளன. கோயிலுக்காக மொத்தம் 12 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முக்கியப் பகுதியான கருவறை எண்கோண வடிவம் கொண்டதாகும். கர்ப்ப கிரகத்தில் நிறுவனப்பட உள்ள ராமர் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் அமைக்கப்படட்டுள்ளது
2,100 கிலோ எடையுள்ள மணி எட்டாவிலிருந்து பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. 1,000 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டதாக கட்டப்பட்டுள்ள கோயிலில் பல கட்ட சோதனைகள் நடத்தி, உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புறம் மிக பிரம்மாண்டமாக அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu