பசுவதையை தடுக்க வலியுறுத்தி சிவசேனா கட்சியினர் தேனி ஆட்சியரிடம் மனு

பசுவதையை தடுக்க வலியுறுத்தி சிவசேனா கட்சியினர் தேனி ஆட்சியரிடம் மனு
X

பசுவதையை தடுக்க வலியுறுத்தி சிவசேனா கட்சியினர் தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கேரளாவிற்கு அடிமாடுகளாக பசுக்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என சிவசேனா கட்சியினர் தேனி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

சிவசேனா கட்சியின் தேனி மாவட்ட தலைவர் குருஅய்யப்பன், மாவட்ட பொதுச் செயலாளர் கருப்பையா, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பழனிசெட்டிபட்டியில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தில் இருந்து பசுவதையை தடுக்க வலியுறுத்தி பசுமாட்டுடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றனர். போலீசார் தடுத்ததால் பசுக்களை விட்டு விட்டு நடந்து சென்று கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

அதில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அடிமாடுகளாக பசுக்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கென கேரள எல்லையி்ல் சிறப்பு சோதனை சாவடி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மனு கொடுத்த பின்னர், கலெக்டர் அலுவலக வாசலில் கோரிக்கையினை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags

Next Story