சிறுத்தையை நேரில் பார்த்ததும் மயங்கி விழுந்த இளம்பெண்

சிறுத்தையை நேரில் பார்த்ததும்  மயங்கி விழுந்த இளம்பெண்
X
எஸ்டேட்டிற்கு வேலைக்கு செல்லும் வழியில் காட்டிற்குள் சிறுத்தையை நேரில் பார்த்த இளம் பெண் மயங்கி விழுந்தார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு டாடா தேயிலை கம்பெனிக்கு சொந்தமான பள்ளிவாசல் எஸ்டேட் மூலக்கடையினை சேர்ந்தவர் ஷோபனா, (வயது35.) இவர் காலையில் வழக்கம் போல் எஸ்டேட் பணிக்கு சென்றார். தனியாக சென்ற இவர், காட்டுப்பாதையினை கடந்து செல்லும் போது, எதிரே சிறுத்தை நடந்து சென்றதை பார்த்துள்ளார். உடனே பதட்டமாகி மயங்கி அங்கேயே விழுந்து விட்டார்.வேலைக்கு வராத ஷோபனாவை தேடி எஸ்டேட் தொழிலாளர்கள் அந்த வழியாக வந்த போது, மயங்கி கிடந்தவரை பார்த்துள்ளனர். எஸ்டேட் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த ஷோபனா சிறுத்தை நடந்து சென்றதை மிகவும் அருகில் பார்த்ததால் மயங்கி விழுந்ததாக தெரிவித்தார்.

Tags

Next Story