கஞ்சா போதையில் வாலிபருக்கு கத்திக்குத்து?

கஞ்சா போதையில் வாலிபருக்கு கத்திக்குத்து?
X

பைல் படம்.

Today Theni News -கூடலுாரில் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த போது நடந்த தகராறில் கஞ்சா போதையில் இருந்த நபர் வாலிபரை கத்தியால் குத்தினார்.

Today Theni News - கூடலுார்- குமுளி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள டீக்கடையில் வாலிபர்கள் சிலர் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மண்ணிலவன் மற்றும் முருகன் ஆகியோருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மண்ணிலவன் கத்தியை எடுத்து முருகனை குத்தினார். சாய்ந்து விழுந்த முருகனை இழுத்துச் சென்று ரோட்டில் போட்டு அடித்துள்ளார். பின்னர் தப்பி ஓடி விட்டார்.

தற்போது முருகன் கம்பம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூடலுார் போலீசார் மண்ணிலவனை தேடி வருகின்றனர்.கத்தியால் குத்திய மண்ணிலவன் கஞ்சா போதையில் இருந்தள்ளார். போலீசார் இவ்வளவு கடும் நடவடிக்கைகள் எடுத்தும், கஞ்சா விற்பனை இன்னும் தாராளமாக நடந்து வருகிறது. கஞ்சா விற்பனையினை தடுப்பது போல் ஒரு நாடகம் மட்டுமே நடத்தப்படுகிறது என மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு