விட்டாச்சு லீவு... பையன்களை பார்த்துக்கோங்க...!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கை கொடுக்காவி்ட்டாலும், வடகிழக்கு பருவமழை கலங்கடித்து விட்டது. சென்னை மற்றும் சுற்றிலும் உள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி தென்மாவட்டங்களையும் புரட்டி போட்டு விட்டது. இன்னும் இந்த மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரல. இந்நிலையில் தமிழகம் முழுக்க பரவலான மழை பெய்துள்ளது.
அத்தனை நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன. ஆறுகள், அருவிகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து விட்டாலும், நீர் வந்து கொண்டுள்ளது. அத்தனை கண்மாய்கள், குளங்களில் நீர் நிரம்பி உள்ளது. இதனால் அரையாண்டு விடுமுறையில் மாணவர்கள் பெரும்பாலும் நீரில் குளித்து விளையாடுவதையே விரும்புவார்கள். நண்பர்களுடன் வெளியில் செல்வதாக சொல்லி, கூட்டு சேர்ந்து நீரோடைகளுக்குள் இறங்கி விடுவார்கள். தற்போது வெள்ளப்பெருக்கு இல்லாத காலம் தான். ஆனால் தற்போது சமூக விரோதிகள் ஆறுகள், ஓடைகள், குளங்கள் என எல்லா இடங்களிலும் மண், மணல் அள்ளி பல பள்ளங்களை உருவாக்கி வைத்துள்ளனர். இதில் நீர் நிரம்பி உள்ளதால் எந்த இடத்தில் ஆழம் உள்ளது என்பதை கண்டறிய முடியாது. எனவே ஒவ்வொரு நிமிடமும் பாதுகாப்பது என்பது சுலபமான விஷயம் இல்லை. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணித்துக் கொள்ளுங்கள் என போலீசாரும், தீயணைப்பு படையினரும் அறிவுறுத்தி உள்ளனர்.
பெற்றோர்களே... உங்கள் பிள்ளைகளை பள்ளி நாட்களை விட விடுமுறை நாட்களில்தான் நீங்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். காரணம் தன் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு விளையாடப் போகிறேன் என சொல்லிவிட்டு நீர்நிலைகளை நோக்கி படையெடுத்துவிடுகின்றனர். ஒரு சில மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் நீர்நிலைகளுக்கு செல்கிறேன் என சொன்னால் விட மாட்டார்கள் என மாற்றி சொல்லிவிட்டு செல்வதும் உண்டு.எனவே பெற்றோர்கள் பள்ளி நாட்களை விட லீவ் நாட்களில் அவர்களை பல மடங்கு கண்காணிப்பது மிக மிக அவசியமாகிறது. குளம், குட்டை. போன்ற நீர் நிலைகளில் தேங்கியுள்ள நீரைக் கண்டவுடன் இவர்களுக்கு அளவிலா ஆனந்தமாகிவிடுகிறது. ஆசையின் மிகுதியால் குதித்துவிளையாடும்போது துார்வாரப்படாத நீர்நிலைகளில் ஒரு சில நேரங்களில் ஆபத்து நேர்ந்து விபரீத விளைவுகளும் ஏற்படுவதும் உண்டு. எனவே தயவு செய்து பிள்ளைகளைக் கண்ணில் வைத்து கண்காணிக்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகிறது. ஆன பின்னர் அவதிப்படுவதை விட வரும்முன் காப்பதே அனைவருக்கும் நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்க..... ஜாக்கிரதையா கண்காணியுங்க...பெற்றோர்களே....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu