தேனி மாவட்டத்தில் பரவலாக மழை: பெரியாறு அணை நீர் மட்டம் உயர்வு

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை: பெரியாறு அணை நீர் மட்டம் உயர்வு
X

வைகை அணை பைல் படம்.

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சில்லென்ற பருவநிலையுடன் இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பருவமழை பெய்கிறது. லேசான சாரல் மட்டும் பெய்கிறது. எங்குமே பலத்த மழை பெய்யவில்லை. பருவநிலை மிகவும் நல்ல முறையில் உள்ளது. இருட்டு அடர்ந்த மேகமூட்டத்துடன் சில்லென்று வீசும் காற்று அத்தனை பேரையும் கவர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதே பருவநிலையுடன் லேசான சாரல் பெய்தது.

ஆண்டிபட்டியில் 7.2 மி.மீ., தேனி அரண்மனைப்புதுாரில் 8 மி.மீ., வீரபாண்டியில் 3.4 மி.மீ., பெரியகுளத்தில் 9 மி.மீ., மஞ்சளாறில் 9.8 மி.மீ., சோத்துப்பாறையில் 7.5 மி.மீ., வைகை அணையில் 4 மி.மீ., போடியில் 2.6 மி.மீ., உத்தமபாளையத்தில் 1.2 மி.மீ., கூடலுாரில் 1.6 மி.மீ., பெரியாறு அணையில் 1.2 மி.மீ., தேக்கடியில் 1.6 மி.மீ., சண்முகாநதியில் 1.8 மி.மீ., மழை பெய்தது.

முல்லைப்பெரியாறு அணைக்கு விநாடிக்கு 800 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 120 அடியை கடந்து உயர்ந்து கொண்டுள்ளது.

வைகை அணைக்கு விநாடிக்கு 100 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு மதுரை மற்றும் ஆண்டிபட்டி சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக 69 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 50.13 அடியாக உள்ளது.

இன்றும் காலை முதல் மாவட்டம் முழுவதும் இருட்டு அடைந்த மேகமூட்டத்துடன் சில்லென்ற காற்று வீசி வருகிறது. மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்