சசிகலா, ஓபிஎஸ் மீது எடப்பாடி கடும் கோபம்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)
கடந்த 2021ல் பொதுவாழ்வில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார்?'' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.
தஞ்சாவூரில் நிருபர்களிடம் இ.பி.எஸ். பேசியபோது:-
இத்தனை ஆண்டுகாலம் அதிமுக.,வை காப்பாற்றியது யார்? அரசியல் ரீ என்ட்ரி என்பது விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வது போன்றதா?கடந்த 2021ல் பொதுவாழ்வில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார்? இத்தனை நாள் கட்சியை காப்பாற்றியது யார்; தொண்டர்கள் தான்!
அதிமுக.,வில் யாரும் சாதி பார்ப்பது கிடையாது. சசிகலாவின் கருத்து தேவையற்றது. ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளே தற்போதும் தொடர்கின்றனர். இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்டவர் ஓ. பன்னீர்செல்வம். பலாப்பழத்தை வைத்து மத்திய அமைச்சராக முயற்சி செய்தார். எந்த காலத்திலும் அவர் யாருக்கும் விஸ்வாசமாக இருந்தது கிடையாது. அனைத்திலும் சுயநலம். மக்கள் அவருக்கு சரியான தண்டனை வழங்கி உள்ளனர். அவரை எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். `` என்றார்.
சசிகலா கடந்த வாரத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பதாக அறிவித்தார். அதிமுகவை காப்பாற்றியே ஆகவேண்டும். அதற்கு பிரிந்துகிடக்கின்ற அனைவரையும் ஒன்று சேர்க்கவேண்டும் என்றார். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று டிடிவி தினகரன் அறிவித்துவிட்டார். சித்திக்கு இது தேவை இல்லாத வேலை. அவரால அதை செய்யமுடியாது. அதை ஏற்கும் நிலையில் யாரும் இல்லை என்பதை சித்தி உணராமல் உள்ளார்.அதனால் இந்த தேவையற்ற வெளியில் இருந்து சித்தி ஒதுங்கி இருப்பதே நாளளது என்று ஒருபோடுபோட்டார் டிடிவி தினகரன்.
பின்னர் அப்படியே சசிகலா கப்சிப் என்று ஆகிவிட்டார். அதேபோலவே பன்னீர் குழுவினரும் ஒருங்கிணைப்புக் குழு என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். ஆனால் ஒருங்கிணைப்புக்கான வேலை கண்ணுக்கு எட்டிய தூரம்வரை காணவேமுடியவில்லை.
ஒன்றுமட்டும் நிச்சயம் என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள். அதிமுகவுக்கு ஏதாவது செய்யப்படவேண்டும். அது என்ன என்பதை தலைமைதான் முடிவுசெய்யவேண்டும். இந்தநிலை தொடர்ந்தால் 2026 சட்டமன்ற தேர்தல் மீண்டும் ஒரு எம்பி தேர்தல் ஆகிவிடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu