கருவேப்பிலை கிலோ ரூ.120க்கு விற்பனை: விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்

கருவேப்பிலை கிலோ ரூ.120க்கு விற்பனை: விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்
X

கருவேப்பிலையை உலர்த்தும் பணியில் பெண்கள்.

தேனியிலிருந்து மசாலா தயாரிப்பு நிறுவனங்களுக்கு உலர்ந்த கருவேப்பிலை கிலோ 120 ரூபாய்க்கு விநியோகம் செய்யப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் தேனி, சின்னமனுார், சீலையம்பட்டி, கோட்டூர் பகுதிகளிலும், ஆண்டிபட்டி பகுதிகளிலும் கருவேப்பிலை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இதில் சந்தைகளில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. மொத்த வியாபாரிகள் கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு வாங்குகின்றனர். வாங்கிய கருவேப்பிலையை உலர்த்தி இலைகளை மட்டும் பிரிக்கின்றனர். இதனை மசால் தயாரிக்கும் மில்களுக்கு ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விநியோகம் செய்கின்றனர். இந்த கருவேப்பிலையை பிரித்து உலர்த்தும் பெண்களுக்கு தினமும் 200 ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது.

கருவேப்பிலை வியாபாரி பிரபாகரன் கூறியதாவது: ஐந்து கிலோ பச்சை கருவேப்பிலை உலர்த்தினால் ஒரு கிலோ உலர்ந்த கருவேப்பிலை கிடைக்கும். மசால் தயாரிக்கும் மில்கள், கருவேப்பிலை பொடி தயாரிக்கும் மில்களுக்கு விநியோகம் செய்கிறோம். சிலர் மருந்து பொருட்களுக்கும் வாங்குகின்றனர். எங்களுக்கு குறைந்த அளவு லாபம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

ஆண்டுதோறும் கருவேப்பிலை தேவைப்படுகிறது. எனவே தேனி மாவட்டத்தில் விளைச்சல் குறைந்தால், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து கருவேப்பிலை வாங்கி, இங்கு உலர்த்தி மீண்டும் விநியோகம் செய்வோம். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்