தேனி ரோடுகளில் பேரிகாட் அமைத்து விபத்தை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேனி ரோடுகளில் பேரிகாட் அமைத்து விபத்தை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள்
X

தேனியில் உள்ள முக்கிய ரோடுகளில் இரும்பு கம்பி தடுப்புகள் (பேரிகாடுகள்) அமைக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தேனி ரோடுகளில் விபத்துக்களை தடுக்க முக்கிய இடங்கள் அனைத்திலும் பேரிகாட் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேனியில் கம்பம் ரோடு, மதுரை ரோடு, பெரியகுளம் ரோடுகள் மிகுந்த போக்குவரத்து முக்கியத்துவம் கொண்டவை. இந்த ரோடுகள் முழுக்க நடுவில் தடுப்பச்சுவர் அமைக்கப்பட்டு, இரண்டு வழிப்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினம் இந்த ரோடுகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன.

விபத்தை முற்றிலும் தவிர்க்க போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்ஷிணாமூர்த்தி தலைமையில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக பிரிக்கப்பட்ட அந்த ரோடுகளிலேயே முக்கியமான நெரிசல் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கெல்லாம் பேரிகாட் (இரும்பு கம்பி தடுப்புகள்) அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரோட்டின் இருபுறமும் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைமுன்பு ரோட்டோரங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்தனர். அந்த தற்காலிக ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு இனிமேல் இப்படி ஆக்கிரமிக்க கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!