தேனி மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுமா?

தேனி மாவட்டம் பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுமா?
X

தேனி மாவட்ட விவசாய நிலம் (கோப்பு படம்)

தேனி மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் விவசாய, தோட்டக்கலை பயிர்கள் விளையும் நிலங்களின் பரப்பளவு 2 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக உள்ளது. .

மாவட்டத்தில் சுருளியாறு, முல்லை பெரியாறு, வைகையாறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, மஞ்சளாறு, சண்முகாநதி என ஏழு பெரிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. தவிர நுாற்றுக்கணக்கான சிற்றோடைகள் உள்ளன. மாவட்டத்தின் 33 சதவீத நிலம் வனநிலமாக உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் வனவளமும், விவசாய வளமும் அதிகமாகவே உள்ளன.

இங்கு விவசாயத்தை தவிர இந்த மக்களுக்கு வேறு வேலை வாய்ப்பு வழங்கும் தொழிற்கூடங்கள் எதுவும் இல்லை. சிறு தொழில்கள், வணிக நிறுவனங்கள், கட்டுமான பணிகள், விவசாய பணிகளே இங்கு முக்கிய தொழில்களாக உள்ளன. குறிப்பாக தேனி மாவட்டத்தில் விவசாய தொழிலில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

இந்த வளங்களை மேலும் வளப்படுத்தவும், விவசாய நிலங்களை மேம்படுத்தவும், மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் விவசாய, தோட்டக்கலைத்துறைகளில் அரசின் முதலீடுகள், மானிய உதவிகள், நலத்திட்டங்கள் அதிகளவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள சூழலை பயன்படுத்தி தேனி மாவட்டத்திற்கு வேளாண் மண்டல அந்தஸ்த்தினை பெற்றுத்தர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்