New Year Wishes 2024-சபரிமலை, பழனி பிரசாதத்துடன் புத்தாண்டு வாழ்த்து..! இது புது டிரெண்டிங்..!

New Year Wishes 2024-சபரிமலை, பழனி பிரசாதத்துடன் புத்தாண்டு வாழ்த்து..! இது புது டிரெண்டிங்..!
X

New Year Wishes 2024-பிரசாதத்துடன் புத்தாண்டு வாழ்த்து (கோப்பு படம்)

தேனி மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர சபரிமலை, பழனி பிரசாதம் வாங்கி வருகின்றனர்.

தற்போது சபரிமலை சீசன் மும்முரமான கட்டத்தை எட்டி உள்ளது. அதேபோல் பழனி தைப்பூச சீசனும் நெருங்கி வருகிறது. மாவட்டத்தில் பழனி, சபரிமலை பக்தர்கள் அதிகளவி்ல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இரண்டு கோயில்களுக்கும் சென்று வழிபடும் பழக்கம் உள்ளவர்கள்.

இப்படி கோயிலுக்கு செல்லும் போது, சபரிமலையில் அரவணை பாயாசம் பிரசாதம், பழனியில் பஞ்சாமிர்த பிரசாதம் வாங்கி வந்துள்ளனர். அதனை தனக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர திட்டமிட்டு வருகின்றனர். எவ்வளவோ வாழ்த்துக்கள் கிடைத்தாலும் புத்தாண்டு அன்று கிடைத்த சபரிமலை ஐயப்பன் பிராதமும், பழனி முருகன் பிரசாதமும் ஈடு இணை அற்றது.

புதிதாக உருவாகி உள்ள இந்த நல்ல பக்தி அணுகுமுறை மிகவும் சிறப்பானது என பிரசாதம் வழங்குபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பழனி, சபரிமலை பிரசாதங்கள் கிடைப்பதால் பலர் புத்தாண்டுக்காக காத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தொடக்க காலத்தில் வாழ்த்து அட்டைகளை வாங்கி பொங்கல், தீபாவளி வாழ்த்துகளை கூறி வந்தோம். குறிப்பாக வாழ்த்து அட்டைகளை ஆசிரியர்களுக்கு ஒருவிதமாகவும், நண்பர்களுக்கு ஒருவிதமாகவும், அதே சிநேகிதிகளுக்கு ஒரு விதமாகவும், உறவினர்களுக்கு ஒரு விதமாகவும் அட்டைகளைத் தேடி வாங்கி அனுப்புவோம். அதில் மனம் நிறைய மகிழ்ச்சி இருந்தது; உறவும் இருந்தது.

தற்காலத்தில் வாட்ஸ்ஆப், முகநூல் வழியாக ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு நகர்கிறோம். அதில் எந்த உணர்வும் இருக்காது. எல்லா நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் ஒரே வாழ்த்து. அவ்வளவுதான்.

இது புதுசு

இந்த சூழலில் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் புது ட்ரெண்டிங்காக பிரசாதம் வழங்கி புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது புதுசாத்தான் இருக்கு.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!