சபரிமலை சீசன் துவக்கம்: தேனி கோவில்களில் மாலை அணிந்து பக்தர்கள் வழிபாடு
போடி ஐயப்பன்கோயிலில் வழிபாடு நடத்தி மாலை அணிந்த பக்தர்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயில் பூஜைகள் தொடங்கின. பக்தர்கள் இன்று காலை 5 மணி முதல் கோயில்களில் வழிபாடு நடத்தி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
தமிழகத்தில் கார்த்திகை மாதம் முதல் தேதி சபரிமலை சீசன் தொடங்கும். தை மாதம் மகரஜோதி ஏற்றும் வரை பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்று கார்த்திகை முதல் தேதி என்பதால் சபரிமலை சீசன் தொடங்கியது. சபரிமலை கோயிலுக்கு வடமாநிலங்கள், வட மாவட்டங்களில் இருந்து செல்பவர்களில் 65 சதவீதம் பேர் தேனி மாவட்டம் வழியாகே செல்வார்கள். இதனால் தேனி மாவட்டத்தில் கார்த்திகை, மார்கழி, தை மாதம் வரை சீசன்களை கட்டி காணப்படும்.
இப்படி செல்லும் பக்தர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்கள், அருவிகள், நதிகளில் நீராடி ஓய்வெடுத்து செல்வார்கள். இதனால் தேனி மாவட்டத்தில் இலவசமாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணிகள், டீ, காபி வழங்கும் பணிகள் என அதிகளவு ஆன்மீகப்பணிகள் நடைபெறும்.
அதேசமயம் தேனிமாவட்டத்தில் வசிப்பவர்களும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நாட்கள் விரதம் இருந்த பஜனை பாடி சபரிமலை சென்று வருவார்கள். இன்று கார்த்திகை முதல் தேதி என்பதால் தேனி மாவட்டம் முழுவதும் கோயில்களில் அதிகாலை 5 மணிக்கே குவிந்த பக்தர்கள் வழிபாடு நடத்தி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதேபோல் மாநிலம் முழுவதும் சபரிமலை செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu