கிராமத்தில் குடியேறினால் ரூ.6.20 லட்சம் பரிசு.. எங்கு தெரியுமா?

கிராமத்தில் குடியேறினால் ரூ.6.20 லட்சம் பரிசு.. எங்கு தெரியுமா?
X

பைல்  படம்.

நகரத்தில் இருந்து கிராமப் பகுதிக்கு சென்றால் ரூ.6,20,000 இலவசமாக வழங்கப்படுகிறது எங்கு தெரியுமா?

உலக அளவில் குழந்தை பிறப்பு குறைந்து வரும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இங்கு பெரிய தலைவலியாக உருவெடுத்திருப்பது முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. கடந்த 1963ம் ஆண்டு ஜப்பானில் நுாறு வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருந்தது. இன்று நுாறு வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தை எட்டி விட்டது. இங்குள்ள மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் முதியவர்கள் என்பது கவனம் பெரும் தகவல். முதுமை ஜப்பான் என்ற சூழல் உருவாகிறது.

கடந்த 2020-21ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 44 ஆயிரம். 2021-2022ல் அது 6 லட்சமாக குறைந்துள்ளது. அதுசரி. வசிப்பவர்கள் அத்தனை பேரும் டோக்கியோவில் தான் வசிக்க வேண்டும் என்ற நினைப்பில் உள்ளனர். இதனால் டோக்கியோ நகரம் திணறி வருகிறது.

இங்குள்ள 23 குடியிருப்பு பகுதிகளில் மக்கள் தொகையினை சரிபாதியாக குறைக்க வேண்டும் என ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி டோக்கியோ நகரை விட்டு வெளியேறும் பெற்றோரின் ஒவ்வொரு குழந்தைக்கும் 10 லட்சம் யென் (ரு. 6.20 லட்சம்) வழங்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ஜப்பானில் கரோனா தொற்று பாதிப்புக்கு பின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஏனெனில் பொருளாதாரத்தை இயக்க போதுமான மக்கள் தொகை இங்கு இல்லை.

ஜப்பானிய அரசாங்கம் டோக்கியோவை விட்டு வெளியேறி புறநகர் அல்லது கிராமங்களில் குடியேறும் ஒவ்வொரு குழந்தைக்கும் 3 லட்சம் யென் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்காததால், 10 லட்சம் யென் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, டோக்கியோ நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள் இந்தப் பணத்தைக் கொண்டு புதிய தொழில் தொடங்கலாம். இந்தப் பணம் கடனல்ல, இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற திட்டத்தை கடந்த 2020ம் ஆண்டு ஜப்பான் அரசு அறிவித்தது. அப்போது 220 குடும்பங்கள் மட்டுமே டோக்கியோவை விட்டு வெளியேறி கிராமப்புறத்திற்கு சென்றன. 2021ல் இதே திட்டத்தை அறிவித்தது. அப்போது 1184 குடும்பங்கள் நகரத்தை விட்டு கிராமம் நோக்கி சென்றன. வரும் 2027ம் ஆண்டிற்குள் 10 ஆயிரம் குடும்பத்தையாவது டோக்கியோவை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என இப்போது இவ்வளவு பெரிய பரிசுத்தொகையினை அறிவித்துள்ளது.

இப்படி வெளியேறி அரசு நிதி உதவி பெறும் குடும்பங்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது கிராமத்தில் வசிக்க வேண்டும். குடும்பத்தின் ஒரு உறுப்பினராவது அங்கு வேலைக்கு செல்ல வேண்டும். அல்லது தொழில் செய்ய வேண்டும் என ஜப்பான் அரசு நிபந்தனை விதித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!