ரூ.4 கோடி விவகாரம் : சிக்கலில் பா.ஜ.க.,

ரூ.4 கோடி விவகாரம் : சிக்கலில் பா.ஜ.க.,
X
ரூ.4 கோடி ரூபாய் பணம் ரொக்கமாக கைப்பற்ற விஷயத்தில் பா.ஜ.க.,வில் பலருக்கு சிக்கல் எழுந்துள்ளது.

பா.ஜ.க.,வின் நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தெரியும் எனக்கூறிய சிலரிடம் இருந்து 4 கோடிரூபாய் பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் என கூறும் சதீஷ் உட்பட ஐந்து பேரிடம் சி.பி.சி.ஐ.,டி விசாரணை நடத்தியுள்ளது. தொழிலதிபர் கோவர்த்தன் என்பவரிடமும் விசாரணை நடந்துள்ளது. அவரது வீட்டிலும் சோதனையிடப்பட்டுள்ளது. ஆனால் புதியதாக எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரது டிரைவர் கணேசனிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் புது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

புளியந்தோப்பு அப்பார்ட்மெண்டில் இருந்து ஒரு பண்டல் பணம், யானைக்கவுனி ஏரியாவில் இருந்து ஒரு பண்டல் பணம் வந்ததாக டிரைவர் கணேசன் கூறியுள்ளார். இந்த பணம் தொடர்பாக விசாரணையில் இரண்டு சீனியர்களின் பெயரை கூறியுள்ளார். கணேஷ் கூறிய அந்த இரண்டு பா.ஜ.க., சீனியர்களையும் விசாரணைக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தவிர கணேஷின் மொபைல் ஆவணங்களை பரிசோதித்த போலீசார், மேலும் பலநுாறு கோடி ரூபாய் பரிவர்த்தனைக்கான ஆவணங்களை பெற்றுள்ளனர். இந்த விஷயத்தில் கோவர்த்தனிடம் முழு விசாரணை நடக்க உள்ளது. கோவர்த்தனிடம் நடைபெறும் விசாரணை பா.ஜ.க.,வில் பலருக்கு சிக்கல் ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மொத்தத்தில் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!