ரூ.200 கோடி மோசடியில் தனிப்படை போலீசாரிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கின

Tamilnadu Police Department - திண்டுக்கல் ரெட்டியார்சந்திரத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் கோவையை தலைமையிடமாக கொண்டு யுனிவர்ஸ் டிரேடிங் கார்ப்பரேசன் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தேனி, திண்டுக்கல், மதுரை, நாகர்கோயில், பெங்களூருவு உட்பட பல இடங்களில் இந்த நிதி நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன.
வத்தலக்குண்டை சேர்ந்த ஆனந்த் என்பவர் தேனி கிளைக்கு மேலாளராக உள்ளார். இவர் தேனி மாவட்டத்தில் மட்டும் 64 பேரிடம் 4.5 கோடி ரூபாய் டெபாஸிட் பெற்றுள்ளார். கடந்த 1029ம் ஆண்டு தேனி கிளை மூடப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்த நிறுவனத்தில் பல ஆயிரம் பேர் 200 கோடி ரூபாய்க்கும் மேல் டெபாஸிட் செய்துள்ளனர். கோவையில் மட்டும் 350 பேர், பெங்களூருவில் இதே எண்ணிக்கையில் டெபாஸிட் செய்துள்ளனர். இதேபோல் பல கிளைகளில் டெபாஸிட் செய்துள்ளனர். ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் பங்குத்தொகை தருவதாக கூறி இவர் டெபாஸிட் பெற்று ஏமாற்றி உள்ளார். இந்த 10 ஆயிரம் ரூபாய் பங்குத்தொகையில் ஒன்று முதல் இரண்டு சதவீதம் ஜி.எஸ்.டி., பிடித்தமும் செய்துள்ளனார். இந்த வழக்கில் தேனி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி தொகை 200 கோடி ரூபாயினை தாண்டி உள்ளது தெரியவந்துள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார், இந்திரா உட்பட பலர் தேனி குற்றப்பிரிவில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, முத்துச்சாமியை கைது செய்தனர். தேனி கிளை மேலாளர் ஆனந்தை தேடி வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணையினை மதுரை ஐ.ஜி., அஸ்ராகார்க், திண்டுக்கல் டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா, தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த மோசடி தொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சுந்தர்ராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சீமைராஜ், ராமலட்சுமி, ரமேஷ், பிச்சைப்பாண்டியன், சவுந்திரபாண்டியன் ஆகியோர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் கோவை, ராமநாதபுரம், மதுரை, ரெட்டியார்சத்திரம், நாகர்கோயில் ஆகிய இடங்களில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். ஆய்வில் லேப்டாப்புகள், சி.பி.யு.,க்கள், ஹார்ட் டிஸ்க்குகள், ரெஜிஸ்ட்ரேசன் ஆவணங்கள், பாண்டுகள், நிதி நிறுவன பட்ஜெட், வரவு செலவு ஆவணங்கள் உட்பட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த டாக்குமெண்ட்டுகள் அடிப்படையில் மோசடி நடந்த தொகையின் அளவு இன்னும் பல மடங்கு உயரலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று கைதாகி உள்ள முத்துச்சாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu