ஓ.பி.எஸ்., தம்பி ராஜா மீது ரூ.1.50 கோடி மோசடி புகார்

ஓ.பி.எஸ்., தம்பி ராஜா மீது ரூ.1.50 கோடி மோசடி புகார்
X

ஓ.பன்னீர்செல்வம்

ரூ.1.50 கோடி மதிப்புள்ள சொத்தை மோசடி செய்து அபகரிக்க முயற்சிப்பதாக நிலத்தின் உரிமையாளர் ஓ.பி.எஸ்., தம்பி ராஜா மீது தேனி எஸ்.பி.,யிடம் புகார் செய்துள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டி ஜெயந்திநகரை சேர்ந்தவர் முனியாண்டி,(59).

இவர் தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், கொடைக்கானல் வில்பட்டியில் என் மனைவி சந்தானலட்சுமி, (54) பெயரில் ஒரு ஏக்கர் 83 சென்ட் நிலம் உள்ளது. என் மகளின் திருமண செலவிற்காக இந்த சொத்தை விற்க ஏற்பாடு செய்தோம்.

இதற்காக கடந்த 2010ம் ஆண்டு பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவரான ஓ.ராஜாவை (ஓ.பி.எஸ்.,சின் உடன் பிறந்த தம்பி), தென்கரையை சேர்ந்த அவரின் உறவினர் கிருஷ்ணன் மூலம் தொடர்பு கொண்டேன். அப்போது அந்த நிலத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாய். இதனை வழங்குவதாக ராஜா உறுதி அளித்தார்.

இதனால் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ராஜாவிற்கு எங்கள் நிலத்தை ஜெனரல் பவர் ஆப் அத்தாரிட்டி எழுதிக் கொடுத்தோம். மூன்று மாதங்களில் 40 லட்சம் தருவதாக கூறிய ராஜா பணத்தை தரவில்லை. (இப்போது அந்த சொத்தின் மதிப்பு ஒண்ணரை கோடி ரூபாய்). இதற்கிடையில் எங்கள் அனுமதியின்றி இடத்தை வேறு நபருக்கு விற்க முயற்சித்தனர்.

இதனால் ஜெனரல் பவர் ஆப் அத்தாரிட்டியை ரத்து செய்ய முயன்றோம். இதனால் ராஜா எங்களை மிரட்டினார். இது குறித்து 2011ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பின்பு 2011ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி தென்கரையை சேர்ந்த விஜயகுமாருக்கு விற்க முயற்சித்துள்ளனர்.

விஜயகுமார் சொத்தின் உரிமையாளர் கையெழுத்து இல்லாமல் வாங்க மறுத்துள்ளனர். இதனால் ராஜாவும், கிருஷ்ணனும் கையெழுத்து போடும்படி எங்களை நிர்பந்திக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!