தேனி மாவட்டத்தில் இருவேறு விபத்தில் இரண்டு பேர் பலி

தேனி மாவட்டத்தில் இருவேறு விபத்தில் இரண்டு பேர் பலி
X
தேனி மாவட்டம் கம்பம், சின்னமனுார் பகுதிகளில் நடந்த இருவேறு சாலை விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தேனி மாவட்டம், சின்னமனுார் ஊத்துப்பட்டியை சேர்ந்த அபிஷேக், 27 என்பவர் நேற்று சின்னமனுார் மெயின் ரோட்டோரம் நடந்து வந்து கொண்டிருந்தார். உத்தமபாளையத்தில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் மோதி, சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

கம்பம், மணிநகரை சேர்ந்தவர் தாமஸ், 50. இவர் நேற்று இரவு டூ வீலரில் கூடலுார் பைபாசில் வந்து கொண்டிருந்தார். எதிரே வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, கம்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி