கூடலுார் ரோட்டோரம் உள்ள கடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

கூடலுார் ரோட்டோரம் உள்ள கடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
X

கம்பம் கூடலுார் ரோட்டோரம் விபத்து ஏற்படுத்தும் வகையில் கடைகள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கம்பம்- கூடலுார் ரோட்டோரம் உள்ள கடைகளால் விபத்து அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தேனி- சின்னமனுார்- உத்தமபாளையம்- கம்பம்- கூடலுார்- குமுளி என நான்கு வழிச்சாலை செல்கிறது. (முதல் கட்டமாக இருவழிச்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.வாகன போக்குவரத்தும் நடந்து வருகிறது).

இந்த சாலையின் இருபுறமும் ஆங்காங்கே ரோட்டோர கடைகள் வைத்துள்ளனர். இந்த கடைகளில் பெரும்பாலும் பார்க்கிங் வசதி விடப்பட்டிருக்கும். பார்க்கிங் வசதி ரோட்டினை அடுத்த ஓரத்தில் சற்று இடைவெளி விட்டு அமைந்திருக்கும்.

ஆனால், கம்பத்தில் இருந்து கூடலுார் செல்லும் ரோட்டோரம் அப்பாச்சி பண்ணை அருகே சில கடைகளில் பார்க்கிங் வசதி முறையாக செய்யப்படவில்லை. இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் ரோட்டை ஒட்டியே நிறுத்தப்படுகின்றன. நான்கு வழிச்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் இந்த முறையற்ற பார்க்கிங்கினால் விபத்தில் சிக்குகின்றன. ஏற்கனவே இங்கு சில விபத்துக்களும் நடந்துள்ளன. இருப்பினும் அதிகாரிகள் பாராமுகம் காட்டுகின்றனர். பெரிய விபத்து ஏற்படும் முன்னர் இந்த ரோட்டோரம் உள்ள கடைகளின் முன்பு பார்க்கிங் வசதியை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story