தேனி மாவட்ட உணவகங்களில் ஆய்வு செய்வது எப்போது?

தேனி மாவட்ட உணவகங்களில்   ஆய்வு செய்வது எப்போது?
X

பைல் படம்

தமிழ்நாட்டில் உணவு உட்கொள்ளும் பொழுது உயிரிழப்பு ஏற்படுவதைத் தொடர்ந்து தேனி மாவட்ட உணவ கங்களில் ஆய்வு செய்ய வேண்டும்.

தேனி மாவட்டத்தில் சைவம் மற்றும் அசைவம் உணவகங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் சில சைவ உணவகங்களில் இரவு நேரங்களில் மீதம் படும் இட்லி வகை மற்றும் சைவ உணவகத்தை மறுநாள் காலை சூடு செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்கின்றனர் என சில உணவகங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோன்று சில அசைவ உணவகங்களில் உள்ள அத்தனை அசைவ வகைகளும் ஃப்ரீசர் குளிர் பாதன பெட்டகங்களில் பதுக்கி வைத்து பல நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த ஓட்டல்களை அடையாளம் காண முடியாததால், நல்ல முறையில் உணவு தயாரித்து விற்கும் உணவகங்களையும் சந்தேகிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனை உரிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தேனி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்,

ஏதேனும் உயிரிழப்பு அசம்பாவிதங்கள் தேனி மாவட்டத்தில் நிகழாமல் தடுக்க, இந்த ஆய்வினை உடனடியாக மேற்கொண்டு உரிய உணவகங்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் மற்றும் அசைவம் காலை தயார் செய்யும் பொழுது அதனை அன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

இதனை மீறும் பட்சத்தில் அந்த கடையினை ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்து, உயிர் வளர்க்கும் உன்னதமான சேவைக்காக உணவகங்களை நடத்தும் முதலாளிகளுக்கு மனிதாபிமானத்தை உணர்த்தும் விதமாகவும் அமைய வேண்டும்.

தேனி மாவட்டத்தில் உணவில் பல நாட்களாக வைத்திருந்து பொதுமக்களுக்கு உணவளிக்கும் உணவுகளில் விஷமாக மாறும் என உயிரிழக்க நேரிட்டால் அதில் தேனி மாவட்ட உணவகங்கள் இருக்கக் கூடாது என உணவகங்கள் நடத்தும் உரிமையாளர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் தங்களது உணவை உட்கொண்டால் எவ்வாறு பாதுகாப்பான முறையில் தயார் செய்து கொடுப்பீர்களோ அதே போல வாடிக்கையாளர்களாகிய பொதுமக்களுக்கும் தரமான உணவை வழங்கும் வகையில் உணவகங்களை நடத்த வேண்டும் என்றும் தேனி பகுதியில் உள்ள பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

குறிப்பாக மீதமுள்ள உணவு வகைகளை தினம் தினம் எடுத்துக் கொள்வதற்கு நிறைய தன்னார் வத் தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன. அதனை தொடர்பு கொண்டு தங்களது உணவுக ளை அவர்களது மூலமாக ஏழை எளிய மக்களின் பசியாறச் வைப்பதை உணவகங்கள் உறுதி செய்ய வேண்டுமென தேனி மாவட்ட சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil