முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகோள்

முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவாக தீர்மானம்  நிறைவேற்ற வேண்டுகோள்
X

பெரியாறு அணை (பைல் படம்)

Mullaperiyar Dam Issue -பெரியாறு அணைக்கு ஆதரவாக 5 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Mullaperiyar Dam Issue -கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வெள்ளிய மட்டம் கிராம ஊராட்சியில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், பெரியாறு அணைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றவும் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த (தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம்) மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாரதீய கிஷான் சங்க தலைவர் டாக்டர் சதீஷ்பாபுவும் இதே கோரிக்கையினை வலியுறுத்தி உள்ளார். பெரியாறு அணை நீரினை பயன்படுத்தும் மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள் வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவாகவும், கேரள அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!