போதைப்பொருளை ஒழிக்க இந்து எழுச்சி முன்னணி தீர்மானம்..!

போதைப்பொருளை ஒழிக்க இந்து எழுச்சி முன்னணி தீர்மானம்..!
X

தேனியில் இந்து எழுச்சி முன்னணியின் வாரவழிபாட்டு கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் போதைப்பொருளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தேனி இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல்ஜி தலைமை வகித்தார். தேனி நகர அமைப்பாளர் முத்துராஜ்ஜீ முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்ஜி வழிகாட்டினார். முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேனி அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் திருவிழா வரும் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அன்று நடைபெற உள்ளதால் திருவிழாவிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். ஆதலால் தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதியும் அடிப்படை வசதிகளையும் மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளையும் சிறப்பாக செய்து தர வேண்டுமாய் இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.


தமிழகத்தில் சில வருடங்களாக போதை கலாசாரம் தலை தூக்கி இருக்கிறது தற்போதைய நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. இதனை தமிழக அரசும், காவல்துறையும் கண்டும் காணாமல் இருந்து வருவது தமிழக மக்களிடையே மிகுந்த அதிருப்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலை நீடிக்குமானால் வருங்கால இளைஞர் சமுதாயம் மிகவும் சீரழிந்து விடும் என்பதில் ஐயம் இல்லை. எனவே தமிழக அரசும் காவல் துறையும் துரித நடவடிக்கை எடுத்து எவ்வித பாரபட்சமும் பாராமல் சமுதாய பேயான போதை கலாசாரத்தை அழித்து ஒழிக்க வேண்டுமாய் இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.

செய்தி ஒரு கண்ணோட்டம் :

தேனி: இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு மற்றும் முக்கிய தீர்மானங்கள்

தேனி: தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் வார வழிபாடு நேற்று (11.03.2024) தேனி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல்ஜி தலைமை வகித்தார். தேனி நகர அமைப்பாளர் முத்துராஜ்ஜீ முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்ஜி வழிகாட்டினார்.

முக்கிய தீர்மானங்கள்:

அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் திருவிழா: வரும் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அன்று நடைபெற உள்ள ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் திருவிழாவிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை சிறப்பாக செய்து தர வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தியது.

போதை கலாச்சாரம்: தமிழகத்தில் சமீபத்திய போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து இந்து எழுச்சி முன்னணி கண்டனம் தெரிவித்தது. இளைஞர்களை பாதிக்கும் போதை கலாச்சாரத்தை அழித்து ஒழிக்க தமிழக அரசும் காவல்துறையும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பங்கேற்பு: கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

முடிவுரை: தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி சமூக நலன் மற்றும் பொது நலன் சார்ந்த முக்கிய பிரச்சனைகளை கையாள்வதில் தொடர்ந்து செயல்படும் என்பதை இந்த வார வழிபாடு மற்றும் தீர்மானங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு