மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர்

மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர்
X

மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு குணப்படுத்தி, அவரது  உறவினர்களிடம் ஒப்படைத்த பெரியகுளம் போலீசார்.

பெரியகுளத்தில் மனநலம் பாதித்த பெண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

பெரியகுளம் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

தென்காசியை சேர்ந்தவர் ராணி, 42. மனநலம் பாதித்த இவர், எப்படியோ பஸ் ஏறி பெரியகுளம் வந்து விட்டார். இங்கு சுற்றித்திரிந்த அவரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பெற்ற ராணி குணமடைந்து, சுய உணர்வுக்கு திரும்பியதும் அவரது உறவினர்கள் விவரம் கேட்டு, அவர்களை பெரியகுளம் வரச்செய்தார். பின்னர் மீனாட்சியை அவர்களிடம் ஒப்படைத்து ஊருக்கு அனுப்பினார்.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!