தேனியில் எம்.ஜி.ஆர்., நகர் கே.ஆர்.ஆர்., பகுதிகளை சர்வே செய்ய கோரிக்கை!
தேனி அல்லிநகரம் நகராட்சி ( கோப்பு படம்)
இது குறித்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் வே.பெத்தாட்சிஆசாத் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தேனி மாவட்டத்தின் தலை நகரமான தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு பட்டா இல்லை. ஏறக்குறைய 70 ஏக்கர் நிலம் சர்வே செய்யப்படாமலேயே உள்ளது. முந்தைய கிராம கணக்கில் 2347, 2350, 2351, 2352, 2356 என்ற பழைய புல எண்களாக இருக்கிறது. தேனி அல்லிநகரம் நகரளவை செய்யப்பட்டு நகரளவை எண்கள் வழங்கப்பட்ட TS NO பின்னரும் மேற்படி நிலங்களுக்கு வழங்கப்படவில்லை இதனால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வீட்டுமனை பட்டா பெற இயலவில்லை.
இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் நாடார் சரசுவதி ஆண்கள் பள்ளி, வனத்துறை, அலுவலகம், அரசு மருத்துவமனை, அடங்கும்.மேற்படி நிலம் 1952 முதல் வனத்துறையிடமிருந்து படிப்படியாக வருவாய்த்துறை முறையாக பெற்றுள்ளது. காப்புக்காடு இல்லை எனவும் வனத்துறை அறிவித்த பிறகும் நகரளவை அதாவது சர்வே வரை பட ஆவணங்களில் வால்கரடு என உள்ளது. கிராமக்கணக்கில் நத்தமாக உள்ளது. நீண்ட காலமாக பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை கோரிக்கை நிறைவேறவில்லை.
அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் ஏனோ ஆர்வம் காட்டவும் இல்லை. மாவட்ட நிர்வாகத்தில் மக்கள் நலனில் அக்கறையுள்ள அதிகாரி தலைமையில் சர்வேயர்களை நியமிக்க வேண்டும். இவ்விசயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசு 2006ல் பிறப்பித்த அரசாணை நம்பிக்கையளித்தது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசு தலையிட்டு தனிக்கவனம் செலுத்தி பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி அல்லிநகரம் பகுதியில் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றித்தர ஆவண செய்யுமாறு தோழமையுடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu