தேனி புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் சிக்னல் அமைக்க கோரிக்கை

தேனி புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் சிக்னல் அமைக்க கோரிக்கை
X

அடிக்கடி விபத்து ஏற்படும் தேனி நான்கு ரோடு சந்திப்பு 

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே ஏற்படும் விபத்தை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே தேனி நகருக்குள் இருந்து வரும் சிவாஜிநகர் ரோடு, மதுரை ரோடு, திண்டுக்கல் ரோடு, புதிய பஸ்ஸ்டாண்ட் ரோடு ஆகிய நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இந்த இடத்தில் ஏராளமான வணிக நிறுவனங்களும் உள்ளன. அதிகளவில் ஆட்டோக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இங்கு, அதிகளவு வாகன போக்குவரத்து உள்ளதால் அடிக்கடி சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் கூட ஏற்படுகின்றன. இதேபோல் மதுரை ரோடு, தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் ரோடு, திண்டுக்கல் ரோடுகள் சந்திக்கும் அரண்மனைப்புதுார் விலக்கிலும் இதே நிலை காணப்படுகிறது. இந்த இரு இடங்களிலும் போக்குவரத்து போலீசார் நின்று கூட போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துவது இல்லை. இங்கு போக்குவரத்து சிக்னல் அமைத்து போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி விபத்தினை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings