எடப்பாடியை கழற்றி விட பா.ஜ.க. முடிவு ?
பைல் படம்
எடப்பாடி பழனிச்சாமி கடந்த செப்டம்பர் 14ம் தேதி யாரையும் அழைத்து செல்லாமல் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை ஒன் - டூ - ஒன் சந்தித்தார். இவர் டெல்லிக்கு செல்வதற்கும் முன் தமிழக ஆளுநர் டெல்லி சென்றார். அப்பொழுது கடந்த கால அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்களின் கோப்புகளையும் இப்பொழுது நடக்கும் தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்களின் கோப்புகளின் நகல்களை பெரிய லெதர் பெட்டியில் தனி, தனியாக அமித் ஷாவிடம் கொடுத்தாராம்.
கவர்னர் டெல்லியில் இருந்த போது தான் தமிழகத்தில் மணல் திருடியதாக பலரது வீடுகளில் சோதனை நடைப்பெற்றது. ஆட்சி மாறினாலும் இவர்களுக்கே அரசு ஒப்பந்தங்கள் செல்கிறது. அது எப்படி என்று மத்திய உளவுத் துறையிடம் உள்துறை அமைச்சர் கேட்ட போது வெளியே தெரியும் அளவுக்கு இரண்டு திராவிட கட்சிகள் மோதிக் கொண்டாலும், திரைமறைவில் இவர்கள் கை கோர்த்து உள்ளனர். இருவருமே பல கோடிகளை முறைகேடாக குவித்துள்ளனர்.
இவர்களுக்கு இணைப்பு பாலம், டெண்டர் முதலாளிகள் தான். அவர்கள் மூலமாக அவர்கள் ஆட்சி நடந்தால் இவர்களுக்கும், இவர்கள் ஆட்சி நடக்கும்போது அவர்களுக்கும் சமமாக பங்கு பிரித்து கொடுக்கப்படுகிறது என்ற தகவலையும் சொல்லியுள்ளார்கள்.
போலீஸ் அதிகாரியாக இருந்த பா.ஜ.க., தலைவரும் இதை ஏற்கனவே ஆதாரபூர்வமாக எடுத்து வைத்தாராம். எடப்பாடி விஷயத்தில் நாம் உஷாராகயிருக்க வேண்டும். அவர் நலனுக்காக எதையும் செய்வார். அவர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டதாம்.
அதோடு காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராகவும், தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் சுனில் தான் எடப்பாடிக்கும் ஆலோசனை கொடுத்து வருகிறார். அவர் செல்வதை கேட்டு தான். பாராளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் கவனம் செலுத்த வில்லையாம். 2026 - சட்டமன்ற தேர்தலில் தான் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என நேரிடையாக கட்சிகாரர்களிடம் அ.தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.
பா.ஜ.க., மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைக்கிறோம். அதற்கு ஏன் நாம் கஷ்டப்பட வேண்டும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாம் பா.ஜ.க.,வை பெரிய அளவில் ஆதரிக்காத காரணத்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ண ஓட்டத்தையே அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் எடப்பாடி கூறிய தகவலும் அமித்ஷாவை எட்டியதாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் சொல்லியபடி டி.டி.வி.தினகரனை கூட்டணியில் சேர்த்திருந்தால், தி.மு.க.ஆட்சிக்கு வந்திருக்காது.
இதனை எடப்பாடி கேட்கவில்லை. எனவே எடப்பாடிக்கு "செக்" வைக்க வேண்டும் என்று முடிவு செய்து தான் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., தான் கூட்டணிக்கு தலைமையேற்க முடிவு செய்தது.
கடந்த 1991ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தல் போல அ.தி.மு.க.,விற்கு 12, காங்கிரஸ் 28 என்று பிரித்துக் கொண்டு போட்டியிட்டதை போல், தற்போது பா.ஜ.க.,விற்கு 28 சீட். அ.தி.மு.க.,விற்கு 12 சீட் என நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துத் கொடுக்கிறோம். எங்கள் கூட்டணி கட்சியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரும் இருப்பார்கள் என்றும் அமித்ஷா தரப்பில் இருந்து நேரடியாக எடப்பாடியிடம் கூறப்பட்டதாம்.
இதனை கேட்ட எடப்பாடி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அமைதி காத்து சென்னைக்கு வந்து விட்டராம். அ.தி.மு.க முன்னான் அமைச்சர்கள் எடப்பாடிக்கு வேட்டு வைக்கவே அண்ணாமலை எதிராக மட்டுமல்ல பா.ஜ க.,விற்கு எதிராகவும் பொங்கி விட்டார்களாம். இதையெல்லம் எடப்பாடி சொல்லித் தான் செய்கிறார்கள் என்று, பா.ஜ.க., டெல்லி தலைமைக்கு இங்குள்ள உளவுத் துறை ரிப்பேர்ட் அனுப்பியதாம்.
இதனை அறிந்த எடப்பாடி அலறி அடித்துக் கொண்டு சமதானம் ஆகி விட்டோம். யாரும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டு பார்த்தும் இதை ஊதி பெரிசாக்கி எடப்பாடியை தம் வழியில் வைத்துக் கொள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் நினைக்கிறர்களாம். அண்ணாமலையோ அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லாவிட்டால் 2014 மக்களவையில் ஏற்படுத்தியது போல பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, ஓ.பி.எஸ்., தினகரன் மற்றும் சமூகத்தை அடிப்படைக் கொண்டு இயங்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து களம் இறங்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.
அந்த தேர்தலில் தி.மு.க.,வை அன்றைக்கு பூஜ்யத்தில் தள்ளிய போல் எடப்பாடியை தற்போது தனிமைப்படுத்தி அதே போன்று பா.ஜ.க., தலைமையில் கூட்டணி அமைத்து அதில் பா.ம.க., தே.மு.தி.க., ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சமுதாய அடிப்படையில் இயங்கும் கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைப்போம். எடப்பாடியை பூஜ்ஜியத்தில் தள்ளுவோம் என்று தெளிவாக இருக்கிறாராம்.
நடைப்பெறும் தேர்தல் பிரதமருக்கான தேர்தல். நாம் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஓட்டு் கேட்போம். எடப்பாடி அ.தி.மு.க., யாருக்கும் ஓட்டு கேட்கும்? எடப்பாடியும் தி.மு.க.,வில் உரிய சீட் கிடைக்காத சில கட்சிகளை பேரம் பேசி அழைத்து தி.மு.க., கூட்டணியையும் பலம் இழக்க செய்வார்.
தி.மு.க.,விற்கு செல்லும் சிறுபான்மையினர் வாக்குகளையும் கொஞ்சம் பிரிப்பார். இந்துக்களின் வாக்குகள் இன்றைய சூழ்நிலையில் பா.ஜ.க.,விற்கே விழும் என்ற நிலையோடு மெகா கூட்டணி பா.ஜ.க., தான். தி.மு.க.,விற்கும், பா.ஜ.க கூட்டணிக்கும் தான் நேரிடையான போட்டி என்பதை இந்த தேர்தல் மூலம் நிரூபித்து குறைந்தபட்சம் 10ல் இருந்து 15 சீட்டுக்களில் வெற்றி பெறலாம்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.,வை அரியணையில் ஏற்றலாம் என்ற உறுதியை கொடுத்துள்ளாராம். இதன்மூலம் எடப்பாடியை தனிமைப்படுத்தும் வேலையை டெல்லி பா.ஜ.க., தொடங்கி விட்டதாம். இதனை அறிந்த எடப்பாடி நிலைமையை எப்படி கையாளப்போகிறார் என்பது தெரியவில்லை. இன்று நடக்கும் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து தன் நிலை என்ன என்பது குறித்து எடப்பாடி தெளிவாக முடிவு செய்யலாம் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu