ஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 35 கிலோ பாலீதீன், இரும்பு கம்பி அகற்றம்

ஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 35 கிலோ பாலீதீன், இரும்பு கம்பி அகற்றம்
X

ஜல்லிகட்டு மாட்டின் வயிற்றில் இருந்த பாலீதீன்,  இரும்பு பொருட்களை அகற்றிய டாக்டர் குழுவினருடன் மாட்டின் உரிமையாளர்.

தேனியில் காளை மாட்டின் வயிற்றில் இருந்த 35 கிலோ பாலீதீன் மற்றும் இரும்பு கம்பி, சாவி உட்பட பல பொருட்கள் அகற்றப்பட்டன.

தேனியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் ஜல்லிக்கட்டு மாடு வளர்த்து வருகிறார். இவரது மாடு கடந்த நான்கு மாதங்களாக சரியாக உணவு உட்கொள்ளவில்லை. மெலிய தொடங்கியது. சிரஞ்சீவி தனது ஜல்லிக்கட்டு மாட்டினை பெரியகுளத்தில் உள்ள தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் அனுமதித்தார்.

காளையை பரிசோதித்த டாக்டர்கள் வயிற்றுக்குள் தேவையற்ற பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். துறைத்தலைவர் உமாராணி, டாக்டர்கள் அருண், சௌபரண்யா, விஷ்ணு ஆகியோர் கொண்ட குழுவினர் ஜல்லிக்கட்டு மாட்டினை அறுவை சிகிச்சை செய்த வயிற்றுக்குள் இருந்த சாவி, இரும்புக்கம்பி, 35 கிலோ பாலீதீன் பொருட்களை அகற்றினர். அதன் பின்னர் மாடு நன்கு குணமடைந்தது. வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!