கண்ணகி கோயிலை புனரமைத்து தாருங்கள்: தேனி கலெக்டரிடம் விவசாயிகள் வேண்டுகோள்
கண்ணகி கோயிலை சீரமைத்து தருமாறு கலெக்டரிடம் மனு கொடுத்த கூடலுார் விவசாயிகள்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பாரதீய கிசான் சங்கம் மற்றும் கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டது: அந்த மனுவின் கோரிக்கை விபரங்கள்: மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு கூடலுார் பளியன்குடியின் மேல்உள்ள சேத்துவாய்கால், தெல்லு கொடி வழியே முழுக்க தமிழக வனப்பகுதி வழியாக ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 6 கி.மீ தூரம் உள்ள பழைய பாதையை வாகனங்கள் செல்லும் வகையில் தார்சாலையை தமிழக அரசு அமைத்து கொடுக்க வேண்டும்.
கேரள அரசு - குமுளியில் இருந்து மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் எப்படி சாலை போட்டு பயன்படுத்தி வருகின்றனரோ, அதன் அடிப்படையிலே தமிழக அரசும் வனத்துறைக்கு சொந்தமான மலைப்பகுதியில் தமிழகத்திலிருந்து பக்தர்கள் கண்ணகி கோவிலுக்கு சென்று வருவதற்கு வசதியாக சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.
2. விண்ணேந்தி பாறை (வண்ணாத்தி பாறை) மலைப்பகுதியில், தமிழகத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலை, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மூலமாக (இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.(340 கோடி) நிதியிலிருந்து,) தமிழகஅரசு சார்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
3.தேனிமாவட்டம், கூடலூரில், தாமரைக்குளம் விதைப்பண்ணைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மிகவும் பழமையான,முற்றிலும் சேதமடைந்துள்ள சிவன் ஆலயத்தை (ஈஸ்வரன் கோவில்) , தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புனரமைப்பு பணிகள் செய்து குடமுழுக்கு செய்திடல் வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu