விவசாயிகள் தாட்கோ கடன் வாங்குவதில் சிக்கல், திடுக்கிடும் தகவல்

விவசாயிகள் தாட்கோ கடன் வாங்குவதில் சிக்கல், திடுக்கிடும் தகவல்
X

தேனி மாவட்டத்தில் விவசாயி கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ( பைல் படம்.)

தேனியில் தாட்கோ மூலம் விவசாயிகள் மானியக்கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதற்கான திடுக்கிடும் காரணம் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு தொழில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாடு வளர்க்க தாட்கோ மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.

இந்த கடன் பெற தேர்வு பெற்ற விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் 'உத்திரவாத சான்று' பெற வேண்டும்.

தற்போது உள்ள கூட்டுறவு சங்கங்களில் பெரும்பாலானவை உத்தரவாத சான்று தர பெரும் தயக்கம் காட்டுகின்றன.

சில கூட்டுறவு சங்கங்களில் உள்ள தலைவர்கள் திட்டமிட்டே சான்றுகளை வழங்க மறுக்கின்றனர். இதனால் விவசாயிகள் கடன் வாங்க முடியவில்லை.

பல லட்சம் ரூபாய் அரசு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த கடனை பெற முடியாமல், 'கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'பால் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் இயக்குனர்களில் பலர் தனியாக பால்பண்ணை நடத்தி வருகின்றனர்.

பால் கூட்டுறவு சங்கம் மூலம் விவசயிகளிடம் ஒரு லிட்டர் பால் 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில்,

இந்த தனியார் பண்ணையில் சில ஆயிரம் ரூபாய்களை அட்வான்ஸ் கொடுத்து விட்டு, ஒரு லிட்டர் பால் 22 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வெளியில் 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.

இப்படி உத்தரவாத சான்று கொடுத்து விட்டால், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று விடும் எனவே பாலில் வரும் வருவாய் தற்போது உள்ள தலைவர்களுக்கு குறைந்து விடும் என்ற காரணத்தால் 'உத்தரவாத சான்று' வழங்க மறுக்கின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், விவசாயிகளுக்கு 'உத்தரவாத சான்று' கிடைக்கவும், மாடு வாங்க தாட்கோ மூலம் மானியக்கடன் கிடைக்கவும் கலெக்டர் முரளிதரன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர்..,

Tags

Next Story
Weight Loss Tips In Tamil