சின்னமனூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத ரேஷன் கடை

சின்னமனூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு  திறக்கப்படாத ரேஷன் கடை
X

கோப்பு படம் 

முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படவில்லை.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே அப்பிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரத்தில் 12 லட்சம் ரூபாய் செலவில், ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முடிந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் முத்துக்கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் இரண்டு கி.மீ., துாரம் நடந்து அப்பிபட்டி கிராமத்திற்கு சென்று பொருட்கள் வாங்குகின்றனர். இதனால் எந்த தேதியில் என்ன பொருட்கள் போடுகின்றனர் என்ற விவரம் தெரியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கடை திறந்திருக்கும் நேரத்திற்கு சென்று பொருட்கள் வாங்க முடியவில்லை. குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பிணிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இந்த சிரமத்தை தவிர்க்க ரேஷன் கடையினை விரைவில் திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!