ஆண்டிபட்டி அருகே மழைநீரை கண்மாயில் சேகரிக்கும் பணி: இளைஞர்கள் மும்முரம்

ஆண்டிபட்டி அருகே மழைநீரை கண்மாயில் சேகரிக்கும் பணி: இளைஞர்கள் மும்முரம்
X

மழைநீரை கண்மாய்களில் சேகரிக்கும் பணியில் ஆசாரிபட்டி கிராம இளைஞர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரை கண்மாய்களில் சேகரிக்கும் பணியில் இளைஞர்கள் சிலர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் கோயில் மலையில் பெய்யும் மழைநீரை இப்பகுதி கண்மாய்களில் தேக்க கால்வாய்களை இளைஞர்கள் சிலர் சீரமைத்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி தாலுகாவில் ஆண்டிபட்டியில் இருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். இப்பகுதியில் பெரும் அளவில் மழை பெய்து வருகிறது. இந்த மழைநீர் கண்மாய்களுக்கு செல்லும் ஓடை புதர்மண்டி காணப்படுகிறது.

இதனால் மழைநீர் வீணடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆண்டிபட்டி ஆசாரிபட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாலமுருகன், கலையரசு, பொன்னுசாமி, தங்கதுரை, ராஜாராம், ராம்குமார், சின்னராஜா உட்பட சிலர் இணைந்து புதர்களை அகற்றி கண்மாய்களில் நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செயல்பாட்டிற்கு விவசாயிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!