வருஷநாடு, ஆண்டிபட்டி, கூடலுாரில் பெய்த கோடை மழை

வருஷநாடு, ஆண்டிபட்டி, கூடலுாரில்  பெய்த கோடை மழை
X

கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் நேற்று பலத்த மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஆண்டிபட்டியில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையில் 37.2 மி.மீ., மழை பதிவானது. கூடலுாரில் 4.2 மி.மீ., தேக்கடியில் 3 மி.மீ., வைகை அணையில் 4.4 மி.மீ., போடியில் ஒரு மி.மீ., மழை பெய்தது.

வருஷநாட்டில் பலத்த மழை பெய்தது. மேகமலை வனப்பகுதியிலும் பல இடங்களில் மழை பதிவாகி உள்ளது. அங்கு மழைமாணி இல்லாததால் மழையளவு கணக்கிடப்படவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture