தொடர் மழையால் போடி பகுதியில் நிரம்பி வழியும் கண்மாய்கள்

தொடர் மழையால் போடி பகுதியில் நிரம்பி வழியும் கண்மாய்கள்
X

நிரம்பி காணப்படும் போடி மரிமூர் கண்மாய்

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், போடி பகுதியில் கண்மாய்கள் நிரம்பி தண்ணீர் தானாக வெளியேறி ரோடுகளில் செல்கிறது.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கு தேனி மாவட்டமும் விதிவிலக்கல்ல. தேனி மாவட்டத்தில் பெய்யும் மழையால். அனைத்து கண்மாய்களுமே நிறைந்து விட்டன.

குறிப்பாக போடி பகுதியில் உள்ள புதுக்குளம், அம்மாகுளம், கழுஓடை, மரிமூர்கண்மாய், மீனாட்சிபுரம் கண்மாய் உட்பட அத்தனை கண்மாய்களும் நிரம்பி விட்டன. மரிமூர் கண்மாய் நிறைந்து மறுகால் பாயும் தண்ணீர் ரோட்டில் சென்று கொண்டிருக்கிறது. அந்த அளவு மழை பெய்து வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி