மேகமலையில் தொடரும் மழை : மூல வைகையில் வெள்ளப்பெருக்கு

மேகமலையில் தொடரும் மழை :  மூல வைகையில் வெள்ளப்பெருக்கு
X

மேகமலை பகுதியில் பெய்யும் மழையால் வருஷநாடு மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் மழையால் மூல வைகையில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் மேகமலை மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் மூல வைகையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மூல வைகையில் மட்டும் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று மூன்றாவது நாளாக மூல வைகையில் விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து உள்ளதாகவும், பொதுமக்கள் ஆற்றங்கரை ஓரம் செல்ல வேண்டாம் எனவும் வருவாய்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!