முல்லைப்பெரியாறு அணையில் மழை நீர் வரத்தும், திறப்பும் அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் மழை  நீர் வரத்தும், திறப்பும் அதிகரிப்பு
X

முல்லைப்பெரியாறு பைல் படம்.

Mullaperiyar Dam Water Level-முல்லைப்பெரியாறு அணை பகுதியில் பெய்யும் மழையால் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Mullaperiyar Dam Water Level- தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்தாலும், முல்லைப்பெரியாறு அணைப்பகுதிகளில் மட்டும் சிறிய அளவில் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையில் 22 மி.மீ., தேக்கடியில் 17.4 மி.மீ., மழை பதிவானது. உத்தமபாளையத்தில் 11.6 மி.மீ., கூடலுாரில் 10.8 மி.மீ., மழை பெய்தது. இந்த மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 6 மணிக்கு விநாடிக்கு 800 கனஅடியாக இருந்தது. விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்பட்டது. நீர் வரத்து இன்று காலை 6 மணிக்கு முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1678 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 127.70 அடியாக உள்ளது.

வைகை அணைக்கு நீர் வரத்து 939 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 869 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 52.99 அடியாக உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா