ரயில் இஞ்சின் சோதனை ஓட்டம்: 2 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை இன்று நடந்த அகல ரயில்பாதையில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டத்திற்காக பதினைந்து நிமிடம் மட்டுமே தேனியில் மூன்று கேட்டுகள் மூடப்பட்டிருந்தன. இதற்கே தேனி போக்குவரத்து நெரிசலில் திணறிப்போனது.
மதுரை- போடி அகல ரயில்வே வழித்தடம் தேனியில் நகரின் மத்தியில் செல்கிறது. இதற்காக மூன்று இடங்களில் ரயில்வே கேட் போடப்பட்டுள்ளது. மூன்றுமே மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் ஆகும்.
இன்று ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஓட்டத்தின் போது என்ஜின் தேனி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ஓரிரு நிமிடங்களில் மீண்டும் ஆண்டிபட்டி கிளம்பிச் சென்றது. அதிகபட்சம் 10 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரை கேட் இதற்காக மூடப்பட்டிருக்கும். இதற்குள் மதுரை ரோடு, பெரியகுளம் ரோடுகளில் கேட்டின் இருபுறமும் தலா 2 கி.மீ., துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 15 நிமிட சோதனை ஓட்டத்திற்கே 4 கி.மீ., அணிவகுத்து நின்ற வாகனங்கள்ரயில் புறப்பட்டு சென்று 30 நிமிடம் கழித்தே போக்குவரத்து சீரானது.
இந்த 15 நிமிட சோதனை ஓட்டத்தையே தாங்க முடியாத அளவு நெரிசல் நிலவுவதால், முழுமையான ரயில் போக்குவரத்து தொடங்கி விட்டால் தினமும் பலமுறை ரயில்வே கேட் மூடப்படும். அப்போது நாள் முழுவதும் சிக்கலாகி விடும். எனவே ரயில் போக்குவரத்து தொடங்குவதற்குள் மதுரை ரோட்டிலும், பெரியகுளம் ரோட்டிலம் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் புலம்பத்தொடங்கி விட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu