மாவட்ட வாரியாக ஒமைக்ரான் தொற்று விவரப்பட்டியல் வெளியீடு

மாவட்ட வாரியாக ஒமைக்ரான் தொற்று விவரப்பட்டியல்  வெளியீடு
X
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ஒமைக்ரான் பாதிப்பு குறித்த விவரங்களையும் சுகாதாரத்துறை வெளியிட தொடங்கிஉள்ளது

இதுவரை கொரோனா தினசரி பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிட்டு வந்த சுகாதாரத்துறை தற்போது மாவட்ட வாரியாக ஒமைக்ரான் பாதிப்பு விவரங்களை வெளியிட தொடங்கி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாடாய்படுத்தி வருகிறது. 88 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 65 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்ட நிலையில், தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்க உள்ளன. இருப்பினும் இன்னமும் கொரோனாவில் இருந்து முழு விடிவு பிறக்கவில்லை.

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லாத நிலையில் இன்று இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையி்ல், மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஒமைக்ரான் சிகிச்சைகளும், பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒமைக்ரான் கிட்டத்தட்ட சமூக பரவலை நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில், மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை மட்டும் வெளியிட்டு வந்த சுகாதாரத்துறை தற்போது ஒமைக்ரான் பாதிப்பு குறித்த விவரங்களையும் தினசரி வெளியிட தொடங்கி உள்ளது.

Tags

Next Story
ai healthcare products