முத்தலாபுரத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

முத்தலாபுரத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
X
பைல் படம்.
முத்தலாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க வேண்டாம் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சின்னமனுார் அருகே முத்தலாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே முத்தலாபுரம் கிராம ஊராட்சியில் ஏழு உட்கடை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் இப்போது புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை இப்பகுதியில் டாஸ்மாக் கடை இல்லாததால் பிரச்னைகள் இல்லாமல் இருந்தது. டாஸ்மாக் கடை அமைத்தால், பிரச்னைகள் அதிகரிக்கும். எனவே டாஸ்மாக் கடை அமைக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!