11 ஆயிரம் மின்இணைப்புக்கு ஒரே ஒரு ஒயர்மேன்..கூடுதல் ஆட்கள் நியமிக்க கோரிக்கை

Public Demanded Extra Staffs
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் உதவி மின்வாரிய பொறியாளர் அலுவலகத்திற்கு கீழ், பூமலைக்குண்டு, தர்மாபுரி, ஜங்கால்பட்டி, லட்சுமிபுரம், சோலைத்தேவன்பட்டி, அழகாபுரி, கள்ளபட்டி, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை, வேப்பம்பட்டி, ஜி.டி.ஆர்., நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் கீழ் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு வழங்க 11 ஆயிரம் மின்இணைப்புகள் உள்ளன. இதற்கேற்ற வகையில் டிரான்ஸ்பார்மர்கள் உட்பட அத்தனை மின்வாரிய கட்டமைப்புகளும் உள்ளன. ஆனால் அதிகாரிகள், பணியாளர்கள் தான் இல்லை.
ஒரு உதவிபொறியாளர், ஒரே ஒரு கிளர்க் உட்பட ஓரிரு பணியாளர்கள் மட்டும் உள்ளனர். ஒரே ஒரு ஒயர்மேன் மட்டுமே இருக்கிறார். ஒரு வயர்மேனால் 11 ஆயிரம் இணைப்புகளையும் எப்படி பராமரிக்க முடியும். இதனால் ஏதாவது ஒரு மின்கம்பத்தில் பியூஸ்போனால் கூட கண்டுபிடிப்பதும், அதனை சீரமைப்பதும் மிகவும் சிரமம். பல நாட்கள் ஆகி விடும். இதனால் மின்வாரியம் தற்காலிக ஏற்பாடுகளை செய்துள்ளது.
Public Demanded Extra Staffs

ஒவ்வொரு கிராமத்திலும் நன்கு வயரிங் தெரிந்த ஒருவரை அதிகாரப்பூர்வமற்ற முறையில் நியமித்துள்ளனர். இவர் மின்கம்பத்தில் ஏறி பழுதுகளை சரிபார்ப்பார். அதாவது வீடுகளுக்கு வழங்கப்படும் மின்இணைப்பு, விவசாய நிலங்களுக்கு வழங்கப்படும் மின்இணைப்பு இரண்டையும் இவர் தான் சரி செய்வார். இப்படி ஒரு தற்காலிக ஏற்பாட்டில் காலத்தை ஓட்டி வருகின்றனர்.இதுபோல் தற்காலிகமாக வேலை செய்பவர்களுக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் மின்வாரியந்தான் பதில் சொல்ல வேண்டிவரும் .இதனைத் தெரிந்தும் பணியாற்ற அனுமதிப்பது ஆபத்தானது.
Public Demanded Extra Staffs

இதனை விட பெரும் சிக்கல் இந்த கிராம மக்கள் அதிகபட்சம் 5 கி.மீ., துாரம் வாகனத்திலோ, நடந்தோ வந்து மின் கட்டணத்திற்குரிய பணம் கட்ட வேண்டும். இங்கு தான் சிக்கலே துவங்குகிறது. வசூலிக்கவும் ஒருவர் மட்டுமே உள்ளார். இதனால் பணிச்சுமையில் இவர் தவிக்கிறார். இப்படி போதுமான பணியாளர்கள் இல்லாமல், மின்வாரிய ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த கிராமத்தில் தான் இப்படி என நினைக்காதீர்கள். கிட்டத்தட்ட தேனி மாவட்டம் முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது. முதல்வர் மனது வைத்தால் தான் மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறையினை புதிய போஸ்டிங் போடுவதன் மூலம் சரி செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu