கூடலுார் நகராட்சியின் மெத்தனத்தால் வீணாகும் குடிநீர்

கூடலுார் நகராட்சியின் மெத்தனத்தால் வீணாகும் குடிநீர்
X

கூடலுாரில் மெயின் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாக வெளியேறி வருகிறது.

கூடலுாரில் மெயின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருவது குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்

கூடலுார் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகி வருவதை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலுார் நகராட்சிக்கும், உத்தமபாளையம், தேவாரம் வரை உள்ள பகுதிகளுக்கும் லோயர்கேம்ப் குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் சப்ளையாகிறது. இன்று (டிசம்பர் 25ம் தேதி) காலை இந்த மெயின் குடிநீ்ர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறியது. அதிகளவு நீர் வெளியேறியதால் ரோட்டில் ஆறு போல் நீர் ஓடியது. இதனால் கூடலுார் மட்டுமின்றி அந்த வழித்தடத்தில் பயன்பெறும் அத்தனை குடியிருப்பு பகுதிகளிலும் சப்ளை பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மாலை வரை தண்ணீர் வீணாக வெளியேறியும் அதனை நிறுத்தி உடைப்பை அடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Tags

Next Story