சலவை தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்கல்

சலவை தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்கல்
X

தேனியில் நடந்த சலவை தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் டாக்டர் பாஸ்கரன் பேசினார்.

தேசிய இளையோர் கூட்டுறவு சங்கம் மூலம் சலவை தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

மத்திய அரசின் கூட்டுறவு நிதி நிறுவனமான ஜனநிதி நிறுவனம் மூலம் தேசிய இளையோர் கூட்டுறவு சங்கம் சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. தேனி எம்.எம்.பல் மருத்துவமனை டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் விபுகுமார், கணேசன், சலவை தொழிலாளர் சங்க பொறுப்பாளர் பரமசிவம், ஜனநிதி கிளை மேலாளர் மருதுபாண்டியன், செயலாளர் ராஜ்மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஜனநிதி கூட்டுறவு சங்கத்தின் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என நிர்வாகிகள் பேசினார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!