பெரியகுளத்தில் தனியார் மதுபான கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு
பைல் படம்
TASMAC News Today Tamil -தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மூன்றாந்தல், காந்தி சிலை அருகில், தேனி சாலை, வைகை அணை சாலையில் என மூன்று இடங்களில் மதுபான கடை செயல் செயல்பட்டு வருகிறது. அதனை அங்கிருந்து அகற்றக்கோரி பெரியகுளத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் .
ஏற்கனவே, பெரியகுளத்தின் முக்கிய பகுதிகளில் மூன்று தனியார் மதுபான கடைகள் செயல்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகில் புதிதாக தனியார் மதுபான கடையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்க முயற்சி செய்தனர் .
இதனை அறிந்த பெரியகுளம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் புதிதாக திறக்க முயற்சிக்கும் தனியார் மதுபான கடை முன்பு சாலை மறியல் போராட்டம் என நடத்தி திறக்க விடாமல் தடுத்து வந்தனர்.
இந்நிலையில், திடீரென இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் மதுபான கடையை திறந்து மது விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். இதனை அறிந்த, இந்திய தவ்ஹீத் ஜமாத் , விடுதலை சிறுத்தைகள் கட்சி , பெரியகுளம் நவாப் ஜாமிஆ பள்ளிவாசல் ஜமாத்தார்கள் நிர்வாகிகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்ட தனியார் மதுபான கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி மனு அளித்திருந்தனர் .
இந்நிலையில், புதிதாக திறக்கப்பட்ட தனியார் மதுபான கடையினை மூடக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தொடர் தர்ணா போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்துவதாக இருந்த நிர்வாகிகளிடம் பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு )சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் வரை, புதிய பேருந்து நிலையம் அருகில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் மதுபான கடையை மூட வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் இந்நிலையில், தற்போது புதிதாக திறக்கப்பட்ட தனியார் மதுபான கடையை திறந்து மது விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , இந்திய தவ்ஹீத் ஜமாத் , மனிதநேய மக்கள் கட்சி , பள்ளிவாசல் ஜமாத்தார்கள் , அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் புதிதாக திறக்கப்பட்ட தனியார் மதுபான கடை முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .
இந்த தகவலை அறிந்த, காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு சுரேஷ் ,பெரியகுளம் வடகரை காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனியார் மதுபான கடைக்கு பூட்டு போட்டனர். அங்கு குவிந்த பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu