தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு பாேராட்டம்

தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு பாேராட்டம்
X

போடி கோர்ட் நடவடிக்கைகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் முழுவதும் வழக்கறிஞர்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் அவரது அலுவலகத்திலேயே சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் இன்று கோர்ட் நடவடிக்கைகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்ட நீதிமன்றம், பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையத்தில் உள்ள நீதிமன்றங்களிலும் கோர்ட் நடவடிக்கைகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள், மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வக்கீல் முருகானந்தத்தை தாக்கிய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story