தேனியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X

பைல் படம்

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை(மார்ச்.17) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், இந்த (மார்ச்) மாத வேலை வாய்ப்பு முகாம் நாளை 17.03.2023 வெள்ளிக்கிழமை தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

வேலை வாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் ஆகிய பல்வேறு கல்வித் தகுதியில் உள்ள வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இவ்வேலை வாய்ப்பு முகாமில், வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். எனவே வேலை நாடுநர்கள் தங்களது சுயவிவர நகல் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் 17.03.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 6379268661 / 8667566347 என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்டத்தைச் சார்ந்த வேலை நாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேனி கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
microsoft ai business school certificate