தென்காசியில் 19ம் தேதி தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம்

தென்காசியில் 19ம் தேதி தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம்
X
தேனி மாவட்ட நிர்வாகமும், கம்பம் ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லுாரியும் இணைந்து தனியார் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி நடத்துகிறது.

தேனி மாவட்ட நிர்வாகமும், கம்பம் ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லுாரி நிர்வாகமும் இணைந்து வரும் 19ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறது.

கம்பம் ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லுாரியில் இந்த முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. பல நுாறு தனியார் கம்பெனிகள், தனியார் வர்த்தக, மருத்துவ நிர்வாகங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., நர்சிங், பார்மசி, டெய்லரிங், டிரைவர்கள், மற்றும் 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

பங்கேற்க வருபவர்கள் தங்களது முழு விவரங்களுடன் கல்விச்சான்று ஒரிஜினல் மற்றும் நகல், ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக நம்பர் 04546-254510ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது