நாடு முழுவதும் இன்று தனியார் மருத்துவமனைகள் இயங்காது

நாடு முழுவதும் இன்று தனியார் மருத்துவமனைகள் இயங்காது
X
ராஜஸ்தானில் டாக்டர் அர்ச்சனா சர்மா தாக்கப்பட்டதை கண்டித்து, இன்று ஒரு நாள் நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள் ஸ்டிரைக் அறிவித்துள்ளன.

ராஜஸ்தானில் டாக்டர் அர்ச்சனா சர்மா மீது ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்தும், தாக்கிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தியும் இன்று இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஒரு நாள் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள் இயங்காது. நோயாளிகளின் அவசர அவசியம் கருதி, அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவும், அதிதீவிர சிகிச்சை பிரிவும் மட்டும் இயங்கும் என டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!