போலீசிடம் இருந்து தப்பிய கைதி; அசாமில் சொந்த ஊரில் கைது

போலீசிடம் இருந்து தப்பிய கைதி; அசாமில் சொந்த ஊரில் கைது
X

பைல் படம்

தேனியில் போலீசிடம் இருந்து தப்பிய கைதி அசாமில் அவரது சொந்த ஊரில் கைது செய்யப்பட்டார்.

தேனியில் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் போலீசிடம் இருந்து தப்பிய கைதி அசாம் மாநிலத்தில் அவரது சொந்த ஊரில் கைது செய்யப்பட்டார்.

அசாம் மாநிலம் டெக்கா பெத்தர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்முண்டா, 27. இவர் மதுரையில் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி தேனி மாவட்ட மத்திய சிறைக்கு அழைத்து வரப்படும் போது போலீசிடம் இருந்து தப்பினார்.

இவரை தேடி வந்த போலீசார் அசாமில் அவரது சொந்த ஊரில் வைத்து கடந்த வாரம் கைது செய்தனர். மீண்டும் தேனிக்கு அழைத்து வரப்பட்ட கணேஷ்முண்டா, ஆண்டிபட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட் உத்தரவுப்பணி கணேஷ்முண்டா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்